Pages

Showing posts with label Technology. Show all posts
Showing posts with label Technology. Show all posts

December 28, 2010

உலகின் மிக சிறிய ஆவர்த்தன அட்டவணை



இந்த வீடியோவில் உள்ளதுவே உலகின் மிகச்சிறிய ஆவர்த்தன அட்டவணை ஆகும். ஒரு தனி தலைமுடியில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இதனை உருவாக்கியவர் ஐக்கிய ராச்சியத்தின் நோட்டிங்கம் பல்கலைகழகத்தை சேர்ந்த இரசாயனவியல் பேராசிரியர் மார்டின் போலியகொப் ஆவார்.

முதலில் இலத்திரனியல் நுண்நோக்கி (Electron Microscope) மூலம் அந்த தலைமுடியை பெரிதாக்கி பின்னர் அயனி பரிமாற்ற கற்றைகள் எழுத்துரு (Ion Beam writer) மூலமாக ஆவர்த்தன அட்டவணையை அப்படியே அம்முடியில் பதிவு செய்ததன் மூலமாக இச்சிறிய ஆவர்த்தன அட்டவணையை உருவாக்க முடிந்ததாக பேராசிரியர் தெரிவித்தார்.

Source: new scientist tv
Stumble
Delicious
Technorati
Twitter
Facebook
Yahoo
Reddit
Feed

December 16, 2010

பறக்கும் வாகனம் - ஹம்வீ

வாகனங்கள் பறப்பது சினிமாவில் சாத்தியம், இதனை நாம் பல சை-பை (Sci-fi) சினிமாக்களில் பார்த்திருக்கிறோம். எனினும் நாம் இதுவரை ரியாலிடியில் இவற்றை பார்த்தது கிடையாது. இவற்றையெல்லாம் உடைத்தெறிய இப்போது அமெரிக்காவின் டார்பா (DARPA) எனப்படும் Defence Advanced Research Project Agency தயாராகி வருகின்றது. ஹம்வீ (HUMVEE) எனப்படும் High Mobility Multipurpose Wheeled Vehicle ஐயும் ஹெலிகாப்டர் ஐயும் ஒன்றுசேர்த்து டிஎக்ஸ் (TX) எனப்படும் புதிய பறக்கும் வாகனம் தயாரிக்கும் முயற்சியில் டார்பா தயாராகி வருகிறது.
Humvee
இந்த டிஎக்ஸ் ரக வாகனம் தரையில் மணிக்கு 65 மைல்கள் வேகத்திலும், வானத்தில் மணிக்கு 150 மைல்கள் வேகத்திலும் செல்லவல்லது. எனினும் இது தரையில் செல்லக்கூடிய உச்ச வேகத்தை கொண்ட மிலிட்டரி வாகனங்களின் வேகத்தை விட குறைந்ததாகவும், மிலிட்டரி ஹெலிக்கொப்டர்களின் வேகத்தை விடவும் குறைவாகவும் இருப்பது சற்றே பின்னடைவே. இது தரையிலும், வானத்திலும் ஒரு சராசரியயான வாகனமே. இந்த வாகனம் துருப்புக்களை ஏற்றி செல்லும்போது எதிரிகளின் தாக்குதல்களுக்கு இலக்கானால் பெரிய பாதிப்புக்கள் இன்றி உடனடியாக தரையிறக்கம் செய்யக்கூடியதாக இருப்பதும் பின்னர் அதிலிருந்து தப்பிச்செல்ல கூடியதாக இருப்பதுமே இதனது பிளஸ் பாயிண்ட் ஆகும்.
TX
இதனை தரையில் பாவிக்கும் போது ஹெலிகாப்டர் பிலேட்ஸ் (Blades) உள்நோக்கி வரும் வண்ணம் டிசையின் செய்யப்பட்டுள்ளது. டிஎக்ஸ் ஒன்றின் பெறுமதி சுமார் 2 லட்சம் அமெரிக்க டாலர் என கணக்கிடப்பட்டுள்ளது. இது 2015 இல் பாவனைக்கு வருமெனவும் கூறப்படுகிறது.          
Stumble
Delicious
Technorati
Twitter
Facebook
Yahoo
Reddit
Feed

December 5, 2010

சஹாரா பாலைவன திட்டம் மூலம் 2050ம் ஆண்டில் உலகின் அரைவாசி மின்சக்தி தேவை நிறைவேற்றப்படுமாம்

மத்திய கிழக்கு மற்றும் உலகின் இதர பாகங்களில் காணப்படும் எரிபொருள் என்றாவது ஒரு நாளைக்கு முடியத்தான் போகிறது. எரிபொருள் என்ன எடுக்க எடுக்க நீர் போன்று ஊறுகின்ற ஒரு பொருளா? இல்லையே. அப்போ இந்த எரிபொருள் எல்லாம் ஒருநாள் முடிந்துவிட்டால் என்ன நடக்கும் என்று நாம் எல்லோருமே எப்போவாவது எங்களுக்குள் அல்லது மற்றவர்கள் மத்தியில் உரையாடியிருப்போம். அதில் பல பேர் முடிவும் (result) கண்டிருக்கமட்டோம்.

இங்கு தான் எரிபொருளுக்கான பிரதியீடு (Substitution for fuel) பற்றிய கவலை உண்டாகின்றது. எரிபொருள் பிரதியீடாக பலவற்றை கூறலாம். உதாரணமாக சூரியசக்தி, அணுச்சக்தி, காற்றின் சக்தி, அலைகளின் சக்தி ஏன் மிக அண்மையில் மின்னலை கூட பயன்படுத்த முடியும் என இந்த லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது. எனினும் பல்வேறு காரணங்களால் இவை எல்லோருக்குமே உகந்ததாக இல்லை. ஆயினும் நாம் தற்போது பயன்படுத்தும் எரிபொருள் முடிவடையுமேயானால் நமக்கு வேறு வழியில்லை அடுத்த பிரதியீடுகளுக்கு செல்வதை தவிர. இதற்காகவே உலகின் வல்லரசு நாடுகள் பல மில்லியன் டாலர்களை ஆய்வுகளுக்காக செலவழிக்கின்றன. இது காலத்தின் தேவையும் கூட.

இந்த பதிவு அதுபோன்ற எரிபொருள்/மின்சக்தி பிரதியீடு சம்பந்தமான ஒரு ஆய்வு பற்றியது.

JST எனப்படும் Japan Science and Technology Agency ம் JICA எனப்படும் Japan International Cooperation Agency ம் இணைந்து செயற்படுத்தும் இந்த ஆய்வுக்கு சஹாரா சூரியசக்தி வளர்ப்பு திட்டம் (Sahara Solar Breeder Project) என பெயரிடப்பட்டுள்ளது. இதில் ஜப்பானிய அல்ஜீரிய பல்கலைகழகங்கள் இணைந்து செயல்படுகின்றன. இந்த திட்டத்தின் மூலம் உலகின் மிக பெரிய பாலைவனமான சஹாராவை 2050ம் ஆண்டில் உலகின் அரைவாசிக்கு மேலான மின்சக்தியை (அதாவது சூரியசக்தி மூலமான மின்சக்தியை) உண்டாக்க வள்ள இடமாக மாற்றுவதே நோக்காகும்.

சரி இப்போ இதன் அடிப்படையை பற்றி பார்ப்போம். சூரியசக்தியை பெறுவதற்கு சூரியகலங்கள் உருவாக்கப்படவேண்டும். சூரியகலங்களின் அடிப்படை மூலம் (Basisbasis) சிலிக்கன் (சிலிக்கா அல்லது சிலிகான் டைஒக்சயிட் எனவும் கூறலாம்) எனப்படும் இரசாயண பதார்த்தம் ஆகும். இந்த சிலிக்கா சில வகையான மணலிலிருந்தே எடுக்கபடுகிறது. அதாவது சஹாரா பாலைவனத்தில் இயற்கையாகவே பெருமளவில் இருக்கும் சிலிக்கன் ஐ பாவித்து உண்டாக்கபடும் சூரியகலங்களில் இருந்தே மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு இவர்கள் தீர்மானித்து இருக்கிறார்கள்.
இது பற்றி டோக்கியோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த Hideomi Koinuma கூறும்போது, சஹாரா பாலைவனத்தில் மிக தூய்மையான (high quality) சிலிகான் இருப்பதாகவும், உலகில் இதற்க்கு முன் இது போன்ற ஒரு ஆய்வு நடத்த படவில்லை எனவும் குறிப்பிட்டார். மேலும் இதன்மூலம் உருவாக்கப்படவுள்ள மின்சாரத்தை high-temperature superconductors மூலமாக பல நூறு கிலோமீட்டர்கள் தூரம் இழப்புக்கள் இன்றி கடத்த முடியும் எனவும் தெரிவித்தார்.


தற்போது இத்திட்டம் பற்றிய முன்னோட்ட ஆய்வுகள் நடந்து கொண்டிருகின்றன. அதில் இவர்கள் முகம் கொடுக்கவேண்டிய பல்வேறு பிரச்சினைகள் பற்றியும் அதற்கான பதிலீடு எவ்வாறு அமையப்போகின்றது என்பது பற்றியும் அதிகமாக கவனம் எடுக்கபடுகிறது. மேலும் பாலைவனங்களில் உருவாகும் மணல்காற்றே (Sand-storm) மிக முக்கியமான பிரச்சினையாகவும் கூறபடுகிறது.


எது எவ்வாறாயினும் இது நடைமுறை படுத்தும் போது மேலும் பல எதிர்பாக்காத இன்னல்கள் வரக்கூடிய சாத்தியங்கள் இருப்பினும் இவற்றை எல்லாம் வெற்றி கொண்டு இந்த ஆய்வு மனித குலத்திற்கு பயனளிக்க வள்ளதாக அமைய எமது வாழ்த்துக்கள். 
Stumble
Delicious
Technorati
Twitter
Facebook
Yahoo
Reddit
Feed

November 29, 2010

மீள் சுழற்சி பைகளும் (Re-usable Bags) சூழலிற்கு நல்லதல்ல - ஆய்வு முடிவு

நெடுங்காலமாக கடதாசி, பொலிதீன் பைகளினால் பல்வேறு பட்ட சூழலியல் பிரச்சனைகளுக்கு இவ்வுலகம் முகம் கொடுத்து வந்ததை அனைவரும் அறிவர். இவை உக்குவதர்க்கு நெடும்காலம் எடுக்குமெனவும், மலை நீரினை புவிக்குள் செல்வதனை தடுக்கும் எனவும் பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகள் அவை மேல் இருந்தாலும் அவை பாவனைக்கு இலகுவாகவும் விலை மிக குறைவாகவும் (துணியினால் செய்த பைகளுடன் ஒப்பிடும் போது) இருந்தமையினால் பலராலும் வெகுவாக பாவிக்கப்பட்டு வந்தது. 





பின்னர் மீள் சுழற்சி பைகளின் அறிமுகம் அதற்கு சரியான தீர்வாக அமைந்தது என பல்வேறு பட்ட சுகாதார, சூழலியல் ஆராய்சிகள் உறுதி செய்ததை அடுத்து பலரும் பரவலாக அதனை பாவிக்க தொடங்கினர். சூழல் பற்றிய கண்ணோட்டம் போது மக்களிடையே பெருமளவு ஆதரவினை பெற்றது. எங்கும் Go Green கோஷம் காதை பிளந்தது எனலாம். இதனை தொடர்ந்து உலகின் வொர்க் சொப் (world's workshop) எனப்படும் சீனாவிலிருந்து பல்வேறுபட்ட டிசைன்களுடனான பைகளுக்கு பெரும் கிராக்கி ஏற்பட்டது. அமெரிக்க ஐரோப்பிய நகரங்களில் இவைகள் மிக பிரபல்யம் அடைந்தன எனலாம்.  



இப்போது திடீரெண்டு பூகம்பம் மூண்டாற்போல் மீள் சுழற்சி பைகளும் சூழலிற்கு நல்லதல்ல என புதியதொரு ஆய்வு தெரிவிப்பதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இது அறிவுஜீவிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அட்செய்தி மேலும் குறிப்பிடுகையில் மீள் சுழற்சி பைகளில் ஈயம் (lead) அடங்கியிருப்பதாகவும் அது நிலக்கீழ் நீரை (ground-water) அடையும் போது பெரும் பாதிப்புக்கள் நிகழலாம் எனவும் எதிர்வு கூறப்படுகிறது. 

எது எவ்வாறாயினும் இதற்கு தகுந்த பிரதியீட்டை கண்டு பிடிக்கும் வரை இதன் பாவனையே உபயோகத்தில் இருக்குமெனவும் அட்செய்தி மேலும் தெரிவிக்கிறது. பொலிதீன், கடதாசி, பிளாஸ்டிக் போன்றவைகளின் பாதிப்பினை விட இதன் பாதிப்பு குறைவாக இருப்பதனாலேயே இவ்வாறு கூறப்படுகிறது. யாருக்கு தெரியும் இதற்கு பிறகு மீண்டும் துணிகளாலான பைகளே பாவனைக்கு வருகின்றனவோ என்னவோ. 


Stumble
Delicious
Technorati
Twitter
Facebook
Yahoo
Reddit
Feed
Related Posts Plugin for WordPress, Blogger...