Pages

June 28, 2011

அஸ்ட்ரா மாஜரின் குழந்தைகளுக்கு உகந்ததல்ல – நீதிமன்றம் தீர்ப்பு

அண்மையில் இலங்கையின் கஹடகஸ்டிகிலிய நீதிமன்றத்தால் அஸ்ட்ரா மாஜரின் உற்பத்தியாளர்களான இலங்கை யுனிளிவர் நிறுவத்திற்க்கு வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பில் இனிமேல் அஸ்ட்ரா மாஜரின் உரையில் இது மூன்று வயதிற்கு கீழ்பட்ட குழந்தைகளுக்கு உகந்ததல்ல எனும் வார்த்தை பிரயோகத்தை சேர்க்குமாறு கூறப்பட்டுள்ளது.
இதற்கு காரணம் இந்த மாஜரின் E-319 எனும் இரசயான பதார்த்தமான Tert-Butyl Hydro Quinone (TBHQ) ஐ கொண்டுள்ளது. இது ஒரு பெற்றோலிய சார்ந்த எதிர் ஆக்சிஜனேற்றி ஆகும். இது குமட்டல், வாந்தி, மூளைகோளாறு மற்றும் சிறுநீரக பாதிப்பு போன்றவைகளை ஏற்படுத்த வல்லது. இதை 5g ற்கு மேல் நுகர்தல் பாதகமாக அமைய வாய்ப்பு உள்ளது. இந்த வகை இரசாயனம் குறிப்பாக குழந்தைகளுக்கு உகந்ததல்ல. இந்த இராசயானம் குறிப்பாக உணவு வகைகளில் நிறத்தை கொண்டு வருவதற்காகவே பயன்படுத்தப்படுகிறது.

இதன் பாவனை பற்றிய விடயத்தை இலங்கை மருத்துவ ஆய்வு மையத்தை சேர்ந்த டாக்டர் அணில் சமரநாயக உறுதி செய்துள்ளார். இப்பதார்த்தத்தின் பாவனை மேற்கு உலக நாடுகளில் பெரும்பாலும் தடைப்பட்டதாகவே இருக்கிறது.

குழந்தைகள் மாத்திரமன்றி பெரியவர்களும் இதனை பாவனையில் இருந்து குறைத்துக்கொள்ளுதல் நன்று.

இந்த பதிவினை யுனிளிவர் நிறுவனத்திற்கு எதிரான பிரச்சாரமாக கருத வேண்டாம். 

ஆதாரம்: லங்காபுவத் மற்றும் UKfoodguide.net

___
Stumble
Delicious
Technorati
Twitter
Facebook
Yahoo
Reddit
Feed

June 21, 2011

ஞாபகத்தன்மையை மீளப்பெறமுடியுமா? ஒரு நரம்பியல் விஞ்ஞான ஆய்வின் முடிவு!

சமீபத்தில் நான் வாசித்த ஒரு ஆய்வினடிப்படையில் இந்த பதிவு இடம்பெறுகின்றது. அது மூளை நரம்புகளுடன் தொடர்புடைய விஞ்ஞானம் அதாவது Neuro-Science பற்றிய ஓர் ஆய்வு. என்னால் இயன்றளவு இலகு தமிழில் இதனை தர முயல்கிறேன். இந்த ஆய்வு அறிக்கையை நீங்கள் முழுமையாக வாசிக்க வேண்டுமேயானால் கீழே முடிவில் தரப்பட்டிருக்கும் லிங்க் மூலமாக சென்று வாசிக்கலாம்.

ஞாபக மறதி?? 

இந்த ஆய்வின் கருப்பொள் ஞாபகசக்தியை இழந்த ஒருவருக்கு மீண்டும் அந்த பழைய ஞாபகசக்தியை கொண்டு வரமுடியுமா என்பதே! அப்படி எதாவது ஒருவிதத்தில் அது முடியுமானால் பலருக்கு அது  வரப்பிரசாதமாக அமையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

தெற்கு கலிபோர்னியா பல்கலைகழகத்தை சேர்ந்த தியோடர் பெர்கர் என்பவரும் அவரது சகாக்களுமாக சேர்ந்து ஞாபகசக்தியை இழந்த மூளையை எவ்வாறு rerestore அதாவது மீள பழைய நிலைக்கு கொண்டு வரமுடியுமென பல நாட்களாக ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர். அண்மையில் அவர்கள் ஆய்வுகூட எலிகளை வைத்து செய்த ஒரு ஆய்வு பலரையும் இவர்கள் பக்கம் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது எனலாம்.
Prof Theodore Berger
ஒரு ஆய்வுகூட எலியின் மூளைப்பகுதியின் Hippocampus எனும் பகுதியில், அதாவது மூளையின் ஞாபகசக்தியை சேமித்திருக்கும் தொகுதியில் (Hippocampus என பெயர் வந்ததற்கு காரணம் அப்பகுதி ஒரு கடல்குதிரை வடிவில் அமைந்துள்ளதேயாகும். ஆங்கிலத்தில் கடல்குதிரையை hippocampus என அழைப்பது வழமை) மின்முனை (Electrode) பொருத்தப்பட்டு கணணியின் மூலம் ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கு அதன் மூளையின் தொழிற்பாடு எவ்வாறு அமைந்துள்ளது என பதிவுசெய்யப்பட்டது.
Hippocampus
பின்னர் ஒருவித இரசாயன பதார்த்தத்தை எலியினது hippocampus பகுதினுள் செலுத்தி ஞாபகசக்தியை தேடிச்செல்லும் நரம்பினை மூடச்செய்யப்பட்டது. பின்னர் அந்த குறிப்பிட்ட எலியை பழைய முன்பு பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சியை செய்யுமாறு தூண்டிய போது அந்த எலியினால் அதனை ஞாபகப்படுத்தி அதனை செய்ய முடியாது இருந்தமை அவதானிக்கப்பட்டது. 
மின்முனை மூலம் தொடர்பிலுள்ள எலி 
எவ்வாறாயினும் மீண்டும் மின்முனைகளின் உதவியுடன் முன்னமே பதிவு செய்யப்பட்டிருந்த அக்குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கான தொழில்பாடுகளை வழங்கியவுடன் அந்நிகழ்ச்சியை அவ்வெலிக்கு முன்னர் போன்று செய்ய முடிந்தமை அவதானிக்கப்பட்டது. இக்குறிப்பிட்ட நிகழ்வின் போது அவ்விரசாயன பதார்த்தம் தொடர்ந்து உள்ளே தான் இருக்கிறது என்பது உறுதிசெய்யப்பட்டது.

மேலும் பதிவு செய்த நிகழ்ச்சிக்கான தொழிற்பாட்டை வேறு தொழிற்பாடுகளுடன் கலந்து (after scrambling) மின்முனை ஊடாக கலந்து வழங்கிய போது அவ்வெலியினால் முன்னரே குறிப்பிட்ட அந்நிகழ்ச்சியை செய்ய முடியாது இருந்தமை அவதானிக்கப்பட்டது.

இந்த ஆய்வுகூட பரிசோதனை முடிவின் பிரகாரம் தியோடர் பெர்கர் கூறியதாவது,

1.       மின்முனைகள் மூலமாக அந்நிகழ்ச்சி மீண்டும் செலுத்தப்பட்டபோது ஒரு சிறிய நேரமே அதாவது தற்காலிகமாகவே அவ்வெலியினால் அந்நிகழ்ச்சி நினைவு கூறப்பட்டது. இது மேலும் அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

2.      இந்த ஒரு நிகழ்ச்சி போன்று பல நிகழ்ச்சிகளை ஒன்றாக சேகரித்து வழங்கி ஆய்வு செய்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

3.       மனிதர்களுக்கு பரிசோதிக்க முன்னர் பல்வேறுபட்ட வெவ்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

4.       மனிதர்களுக்கும் இவ்வாறு உட்புகுத்தலின் மூலம் நினைவுகளை, பேச்சாற்றல்களை மீண்டும் வரவைக்க முடியும்.

அதாவது பெரும்பாலான நபர்களினால் இவ்வாய்வு மனிதர்களுக்கும் பயன்மிக்கதாக அமையும் என நம்பப்படுகிறது. எது எவ்வாறாயினும் சில விடயங்களை மீண்டும் ஞாபகத்திற்கு எடுத்துக்கொள்ளாமல் விடுவதே மேல் என நான் நினைக்கிறேன். எனினும் பரவலாக நன்மையை மட்டும் நோக்குமிடத்து இவ்வாய்வு மிக முக்கியமானதாகவே கருதுகின்றேன்.


Source:
Stumble
Delicious
Technorati
Twitter
Facebook
Yahoo
Reddit
Feed

June 19, 2011

Channel 4 காணொளியும் அதன் மறுமொழிகளும் - இலங்கை ஊடகங்களின் பார்வையில்!!

பிரித்தானிய சர்வதேச தொலைக்காட்சியான Channel 4 நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட “இலங்கை – கொலைக்களம்” காணொளிக்கு பல்வேறு தரப்பட்ட சார்பு மற்றும் மாற்று கருத்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. பொதுவாக வெளிநாடுகளில் வாழும் மக்கள் சார்பான கருத்துளையும், இலங்கையில் உள்ள பெரும்பாலானோர், அதிகமான தமிழ் பேசும் மக்களை தவிர்த்து மாற்று கருத்துக்களை கொண்டுள்ளதை காணக்கூடியதாக இருக்கிறது.

Channel 4 footage

இந்த காணொளியின் நம்பகத்தன்மை (authenticity) பற்றிய விவாதங்கள் தற்போது சற்று உச்ச நிலையை அடைந்துள்ளன என கூறலாம்.
Mr Basil Rajapakse

இதுபற்றி இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் திரு பசில் ராஜபக்சே அவர்கள் கருத்து தெரிவிக்கும்போது,

Once again some pro-LTTE elements have used the Channel 4 news agency after giving money to them (Channel 4) in order to tarnish the image of both the Sri Lankan government as well as the Army” என கூறினார்.

அதாவது, தமிழீழ விடுதலை புலிகளின் ஆதரவாளர்களால் பணம் கொடுக்கப்பட்டே இந்த காணொளி தயாரிக்கப்பட்டதாகவும் இது இலங்கையின் கௌரவத்தை சர்வதேச ரீதியில் பாதிப்படைய செய்வதற்காகவே தயாரிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

Dr Dayan Jayathilake

மேலும் பிரான்சுக்கான இலங்கை தூதுவர் டாக்டர் தயான் ஜயதிலக இது பற்றி ரேடியோ பிரான்சுக்கு விவரம் அளிக்கும்போது, இதுவகையான போர்க்குற்றம் மற்றும் பொதுமக்கள் படுகொலைகளை, பாரிய அழிவுகளை தரும் ஆயுதங்கள் ஈராக்கிளுள்ளதாக கூறப்பட்டதற்கு ஒப்பானது அதாவது நம்பமுடியாத்தன்மை வாய்ந்தது என கருத்துரைத்தார்.

Mr Siri Hewawitharana

இக்காணொளி பற்றி அவுஸ்திரேலியாவை சேர்ந்த சர்வதேச புகழ்பெற்ற கேபிள் மற்றும் தொலைத்தொடர்பு இலத்திரனியல் வித்தகர் திரு சிறி ஹெவவிதாறன (இலங்கை அரசாங்கத்தின் சார்பில் காணொளியை ஆராயும் தொழிநுட்ப வித்தகர்) கூறுகையில், “இக்காணொளி முற்றிலும் போலியானது. இது தயாரிக்கபட்டதன் நோக்கமே வேறு, தற்போது செயலிழந்து, மதிப்பிழந்து இருக்கும் Channel 4 தொலைக்காட்சியின் மதிப்பை கூட்டி காட்டுவதற்காகவே இது தயாரிக்கபட்டிருக்கிறது. இங்கிலாந்தில் Channel 4 தொலைக்காட்சியை குப்பைகளின் அரசன் (King of trash) என்றே அழைப்பது வழக்கம்” என சுட்டிக்காட்டினார். மேலும் அவர் கூறுகையில், “ஒரு சாதாரண அனுபவமற்ற காணொளி எடிட்டிங் செய்யக்கூடியவருக்கே காட்சிகளின் ஒழுங்கமைப்பில் உள்ள குறைபாடுகளையும் மற்றும் காட்சிகளுக்கு இடையிலான ஒளிமாறுபாட்டையும் கண்டுகொள்ளமுடியும்.” எனவும் “இந்த காணொளியில் திகதி மாறாட்டம் இருப்பதை அமெரிக்க வித்தகர்களே ஒத்துக்கொண்டார்கள்.” எனவும் அவரது வாதங்களை முன்வைத்தார். 
    
இன்று இலங்கையில் வெளியாகிய “The Sunday Observer” இல் அதன் ஆசிரியர் கருத்து தெரிவிக்கையில், இது முற்றிலுமாக அடிப்படையற்ற காணொளி, இதன் மூலம் இலங்கையில் தற்போது சமூகங்களிடையே உருவாகியுள்ள இன நல்லிணக்கம் பாதிப்படைய வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளதாக கூறியுள்ளார். மேலும் இலங்கை இராணுவம் தமது உயிரையும் துச்சமாக மதித்து அந்நேரத்தில் சுமார் ஆறு லட்சம் மக்களை வடக்கு கிழக்கிலிருந்து புலிகளின் கோரப்பிடியிலிருந்து காப்பற்றியதையும் அவரது ஆசிரியர் தலையங்கத்தில் எடுத்துரைக்கப்பட்டிருக்கிறது. மேலும் அந்த காணொளியை காண்பவர்கள் ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து Channel 4 தொலைக்காட்சி பற்றி அறிந்து தீர்மானங்களிற்கு வருமாறும் கூறப்பட்டிருக்கிறது.

இலங்கையின் பழம்பெரும் போட்டோ படப்பிடிப்பாளரும், செய்தியாளருமான திரு சுசந்த பெர்னாண்டோ இதுபற்றி அவரது கட்டுரையில் கூறுகையில், இப்போது சந்தையில் மிக சிறந்த நுன்னியமான வீடியோ எடிட்டிங் வசதிகள் கொண்ட சாப்ட்வேர்கள் உள்ளதாகவும், இது போன்ற ஒன்றை தயாரிப்பது ஒன்றும் அப்படி பெரிய வேலை இல்லை என்று கூறியுள்ளார். மேலும் போலியாக தயாரிக்கப்பட்ட கானொளிகள் பார்ப்பவர்கள் மத்தியில் கூடுதலாக மனதை கவரும் எனவும் அதற்கு சான்றாக இங்கிலாந்தின் வார்விக் பல்கலைகழகத்தின் ஆய்வாளர் டாக்டர் கிம்பெர்லி வேட் என்பவர் செய்த ஆய்வினையும் முன்வைத்தார்.

இதேவேளை இலங்கை இராணுவ பேச்சாளர் மேஜர் ஜெனரல் மெதவேல குறிப்பிடுகையில், இக்காணொளி பற்றிய உண்மைத்தன்மையை அறிவதற்காக இராணுவமும் தமது விற்பன்னர்கள் அடங்கிய குழாமுடன் ஆலோசனை செய்வதாக குறிப்பிட்டார். இதற்காக பெருமளவில் விமான படையினரின் ஆளற்ற விமானம் மூலமாக படம் பிடிக்கப்பட்ட ஆகாய போட்டோக்களை பயன்படுத்த போவதாகவும் தெரிவித்தார்.

இன்று “The Sunday Leader” பத்திரிகையில் வெளியான கட்டுரை ஒன்றில் கட்டுரையாளர் திருமதி திசராணி குணசேகர அவர்கள் கொஞ்சம் நடுநிலைமையாக அலசியிருப்பதை இங்கு குறிப்பிடலாம். Channel 4 தொலைக்காட்சி நான்கு தொழிநுட்ப விற்பன்னர்களை வைத்து இக்காணொளி உண்மையென வாதிடுவதையும் இலங்கை அரசோ ஒரே ஒரு தொழிநுட்ப விற்பன்னரை வைத்துக்கொண்டே இதனை சாதிப்பதாகவும் அவர் மேலும் எழுதியுள்ளார்.  

இந்த காணொளி உண்மையானதா அல்லது மற்றவர்கள் கூறுவதை போன்று போலியாக தயாரிக்கப்பட்டதா என்ற உண்மை நிலை கிடைக்க பெறும் வரை இந்நிலை தொடரும் எனவும் கூறமுடியும். எது எப்படியாயினும் எமது தலைக்குள் தற்போது ஓடிக்கொண்டிருப்பது இதன் உண்மை நிலை தான் என்ன? யார் இதனை உண்மை என்றோ இல்லை போலியானது என்றோ தீர்மானமாக கூறப்போகிறார்கள்? இந்த கேள்விக்கு விடை உண்மையில்தான் கிடைக்குமா?

இம்ரான் சாஹிர் 



News Source:
1. The Sunday Observer
2. The Sunday Leader
3. The Nation
4. The Sunday Times
5. Other critical reading from other websites


Stumble
Delicious
Technorati
Twitter
Facebook
Yahoo
Reddit
Feed

January 14, 2011

பொங்கலோ பொங்கல் - வெள்ளமோ வெள்ளம்

இதுவே இந்த வருடத்தின் எனது முதல் ப்ளாக் என்ட்ரி.

வெள்ளம், நிவாரணம், கல்வி, உத்தியோகம், குடும்பம் என சற்றே பிசியாக இருந்துவிட்டேன். இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இன்னமும் மழை விடாப்பிடியாக பெய்து கொண்டிருக்கிறது. இலட்சக்கணக்கில் மக்கள் உறையுள், சொத்து, உறவு என அனைத்தையும் இழந்து நிவாரண மையங்கலினுள் உள்வாங்கபட்டுள்ளார்கள். எங்கு பார்த்தாலும் மரண ஓலம் போன்றது போலவே சத்தம். எத்தனையோ வருடங்கள் சேமித்த சொத்துக்கள் கண் முன்னே வெள்ளம் அழிப்பதை பார்த்துகொண்டு இருக்க யாரால் தான் முடியும்.



எமது அலுவலகம், மற்றும் நண்பர்கள் வட்டாரத்தினர் ஒன்று சேர்ந்து எம்மாளியன்ற உதவிகளை, குறிப்பாக குழந்தைகள், தாய்மார்களை கருத்திற்கொண்டு கிழக்கு மாகாணத்தின் திருக்கோணமலை நகரிலுள்ள கிண்ணியா எனும் பிரதேசத்திலுள்ள மக்களிடம் கொண்டு சேர்த்தோம். அங்கு போன பின்பு தான் எமக்கு அது உண்மையாகவே உறைத்தது. நாம் கொண்டு சேர்த்த பொருட்கள் ஒரு சிறு கூட்டத்தாருக்கே போதுமாக இருந்தது. மக்களோ சாரை சாரையாக, கூட்டம் கூட்டமாக பெருகி இருந்தார்கள். எம்மை போன்ற பலர் தலைநகரிலிருந்தும் இலங்கையின் பிற மாவட்டங்களிலிருந்தும் நிவாரண உதவிகளோடு வந்திருந்தார்கள்.

குறிப்பாக அவற்றை பங்கீடு செய்வதில்தான் அப்பப்பா எத்தனையோ சிக்கல்கள். இது ஒரு அவசரகால நிவாரணத்தில் சகஜம்தான், என்றாலும் சரியாக தேவைப்படும் மக்களுக்கு போய் சேருமா என்பது ஐயமே. உடல் வலிமை, பலம் உள்ளவர்கள் மாத்திரமே முன் வந்து அடித்து பிடித்து பொருட்களை வாங்கி செல்வதை பார்க்க கூடியதாக இருந்தது. மனத்தை அது ரணமாக்கியது. அரசாங்க நிவாரணத்தையும் சிறிதளவில் பார்க்க கூடியதாக இருந்தது. ஆனாலும் இன்னமும் நிறைய அளவில் அது தேவையானதாக இருக்கிறது.

இன்று உலகம் முழுவதிலுமுள்ள தமிழர்கள் உழவர் திருநாளான பொங்கல் தினத்தை சிறப்பாக கொண்டாடிக்கொண்டிருக்கிறாகள் என்று கூறுவதற்கு எனக்கு விருப்பமாக இருந்தாலும், உண்மை அதுவில்லையே. எத்தனையோ பேர்கள் தமது சொந்தங்களை, சொத்துக்களை இழந்து பரிதவித்து கொண்டிருக்கிறார்கள். இன்று பொங்கல் தினமா என்பதை கூட கற்பனை செய்து பார்க்க முடியாதவர்கள் பலர் உண்டு. எப்படி எப்படியெல்லாம் குழந்தைகள், குடும்பத்தினரோடு கொண்டாட வேண்டும் என நினைத்திருந்தவர்கள் பலருக்கு அப்பாக்கியம் இந்த ஆண்டு கிடைக்கவில்லை. கிட்டவில்லை.

பிரிஸ்பேன் வெள்ளம்
இயற்கையின் சீற்றம் இலங்கையில் மாத்திரமல்ல, இன்று உலகளாவிய ரீதியில் பல நாடுகளையும் இந்த புது வருடத்தில் தாக்கியுள்ளது குறிப்பாக பிரிஸ்பேனில் வெள்ளம், பிரேசிலில் மண்சரிவு. எந்த செய்தி சேவையை திறந்தாலும் இந்த நாட்டில் இவ்வளவு பேர் இறப்பு என்ற செய்தியே கண்முன்னே தெரிகின்றது.
பிரேசிலின் பாரிய மண்சரிவு

பல இடங்களில் தாழ்அமுக்கமும், அதன் காரணமாக தொடர்ச்சியான இடைவிடாத மழையுமே இச்சீற்றத்திற்கெல்லாம் காரணம். லா நினா (La Nina), எல் நினோ (El Nino) போன்ற காலநிலை மாற்றங்கலினாலேயே இவ்வாறெல்லாம் நிகழ்கிறது. இவ்வாறான காலநிலை மாற்றங்களுக்கு நாமே முக்கிய காரணம். அதாவது பச்சைவீட்டு விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய வாயுக்கள் (Greenhouse gases) வளிமண்டலத்தை அடைவது இப்போது என்றுமில்லாதவாறு உச்சத்தை அடைந்துள்ளது. யார் யாரோ செய்யும் பாவம் யார் யாரையோ தாக்குகிறது. 

அதனால் நாம் இயன்றளவு உலக வெப்பமயமாதலுக்கு (Global Warming) ஏதுவாக அமையும் வாயுக்கள் வெளியேற்றத்தை மிகவும் குறைக்க முயற்சிக்க வேண்டும். இது பற்றிய கற்கைகள் ஆய்வுகளை முடியுமான அளவு வாசிக்க வேண்டும். இது பற்றிய அறிவை குடும்பத்தினருக்கு, மற்றும் நண்பர்களுக்கு பகிர வேண்டும். 

இதனை வாசிக்கும் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். நாம் எல்லோரும் நமக்காக நாம் ஆவோம். 

 

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook
Yahoo
Reddit
Feed
Related Posts Plugin for WordPress, Blogger...