Pages

Showing posts with label World News. Show all posts
Showing posts with label World News. Show all posts

January 14, 2011

பொங்கலோ பொங்கல் - வெள்ளமோ வெள்ளம்

இதுவே இந்த வருடத்தின் எனது முதல் ப்ளாக் என்ட்ரி.

வெள்ளம், நிவாரணம், கல்வி, உத்தியோகம், குடும்பம் என சற்றே பிசியாக இருந்துவிட்டேன். இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இன்னமும் மழை விடாப்பிடியாக பெய்து கொண்டிருக்கிறது. இலட்சக்கணக்கில் மக்கள் உறையுள், சொத்து, உறவு என அனைத்தையும் இழந்து நிவாரண மையங்கலினுள் உள்வாங்கபட்டுள்ளார்கள். எங்கு பார்த்தாலும் மரண ஓலம் போன்றது போலவே சத்தம். எத்தனையோ வருடங்கள் சேமித்த சொத்துக்கள் கண் முன்னே வெள்ளம் அழிப்பதை பார்த்துகொண்டு இருக்க யாரால் தான் முடியும்.



எமது அலுவலகம், மற்றும் நண்பர்கள் வட்டாரத்தினர் ஒன்று சேர்ந்து எம்மாளியன்ற உதவிகளை, குறிப்பாக குழந்தைகள், தாய்மார்களை கருத்திற்கொண்டு கிழக்கு மாகாணத்தின் திருக்கோணமலை நகரிலுள்ள கிண்ணியா எனும் பிரதேசத்திலுள்ள மக்களிடம் கொண்டு சேர்த்தோம். அங்கு போன பின்பு தான் எமக்கு அது உண்மையாகவே உறைத்தது. நாம் கொண்டு சேர்த்த பொருட்கள் ஒரு சிறு கூட்டத்தாருக்கே போதுமாக இருந்தது. மக்களோ சாரை சாரையாக, கூட்டம் கூட்டமாக பெருகி இருந்தார்கள். எம்மை போன்ற பலர் தலைநகரிலிருந்தும் இலங்கையின் பிற மாவட்டங்களிலிருந்தும் நிவாரண உதவிகளோடு வந்திருந்தார்கள்.

குறிப்பாக அவற்றை பங்கீடு செய்வதில்தான் அப்பப்பா எத்தனையோ சிக்கல்கள். இது ஒரு அவசரகால நிவாரணத்தில் சகஜம்தான், என்றாலும் சரியாக தேவைப்படும் மக்களுக்கு போய் சேருமா என்பது ஐயமே. உடல் வலிமை, பலம் உள்ளவர்கள் மாத்திரமே முன் வந்து அடித்து பிடித்து பொருட்களை வாங்கி செல்வதை பார்க்க கூடியதாக இருந்தது. மனத்தை அது ரணமாக்கியது. அரசாங்க நிவாரணத்தையும் சிறிதளவில் பார்க்க கூடியதாக இருந்தது. ஆனாலும் இன்னமும் நிறைய அளவில் அது தேவையானதாக இருக்கிறது.

இன்று உலகம் முழுவதிலுமுள்ள தமிழர்கள் உழவர் திருநாளான பொங்கல் தினத்தை சிறப்பாக கொண்டாடிக்கொண்டிருக்கிறாகள் என்று கூறுவதற்கு எனக்கு விருப்பமாக இருந்தாலும், உண்மை அதுவில்லையே. எத்தனையோ பேர்கள் தமது சொந்தங்களை, சொத்துக்களை இழந்து பரிதவித்து கொண்டிருக்கிறார்கள். இன்று பொங்கல் தினமா என்பதை கூட கற்பனை செய்து பார்க்க முடியாதவர்கள் பலர் உண்டு. எப்படி எப்படியெல்லாம் குழந்தைகள், குடும்பத்தினரோடு கொண்டாட வேண்டும் என நினைத்திருந்தவர்கள் பலருக்கு அப்பாக்கியம் இந்த ஆண்டு கிடைக்கவில்லை. கிட்டவில்லை.

பிரிஸ்பேன் வெள்ளம்
இயற்கையின் சீற்றம் இலங்கையில் மாத்திரமல்ல, இன்று உலகளாவிய ரீதியில் பல நாடுகளையும் இந்த புது வருடத்தில் தாக்கியுள்ளது குறிப்பாக பிரிஸ்பேனில் வெள்ளம், பிரேசிலில் மண்சரிவு. எந்த செய்தி சேவையை திறந்தாலும் இந்த நாட்டில் இவ்வளவு பேர் இறப்பு என்ற செய்தியே கண்முன்னே தெரிகின்றது.
பிரேசிலின் பாரிய மண்சரிவு

பல இடங்களில் தாழ்அமுக்கமும், அதன் காரணமாக தொடர்ச்சியான இடைவிடாத மழையுமே இச்சீற்றத்திற்கெல்லாம் காரணம். லா நினா (La Nina), எல் நினோ (El Nino) போன்ற காலநிலை மாற்றங்கலினாலேயே இவ்வாறெல்லாம் நிகழ்கிறது. இவ்வாறான காலநிலை மாற்றங்களுக்கு நாமே முக்கிய காரணம். அதாவது பச்சைவீட்டு விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய வாயுக்கள் (Greenhouse gases) வளிமண்டலத்தை அடைவது இப்போது என்றுமில்லாதவாறு உச்சத்தை அடைந்துள்ளது. யார் யாரோ செய்யும் பாவம் யார் யாரையோ தாக்குகிறது. 

அதனால் நாம் இயன்றளவு உலக வெப்பமயமாதலுக்கு (Global Warming) ஏதுவாக அமையும் வாயுக்கள் வெளியேற்றத்தை மிகவும் குறைக்க முயற்சிக்க வேண்டும். இது பற்றிய கற்கைகள் ஆய்வுகளை முடியுமான அளவு வாசிக்க வேண்டும். இது பற்றிய அறிவை குடும்பத்தினருக்கு, மற்றும் நண்பர்களுக்கு பகிர வேண்டும். 

இதனை வாசிக்கும் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். நாம் எல்லோரும் நமக்காக நாம் ஆவோம். 

 

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook
Yahoo
Reddit
Feed

December 28, 2010

மனைவியின் ஈமெயிலை வாசித்தமைக்காக கணவனுக்கு சிறை

மனைவியின் ஜிமெயில் கணக்கின் பாஸ்வோர்ட்டை உபயோகித்து அவரது ஈமெயில்களை வாசித்த கணவனுக்கு ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனை கிடைத்த சம்பவம் ஒன்று அமெரிக்காவின் மிச்சிகன் நகரத்தில் இடம்பெற்றுள்ளது.

இது பற்றி போலீஸ் மேலும் விவரிக்கையில் லியோன் வால்கர் என்பவர் ஒரு கம்ப்யூட்டர் தொழில்நுட்பவியலாளர், இவரது மனைவியான கிளாரா வால்கர் அவரது முன்னைய கணவருடன் இரகசிய தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகித்தே லியோன், கிலாராவின் மடிகணணியை உபயோகித்து அவரது ஈமெயில்களை வாசித்துள்ளார். ஆனாலும் இது அமெரிக்க சட்டத்தின் பிரகாரம் மற்றவர்களின் அடையாளங்களை திருடும் குற்றத்தினுள் உள்வாங்கிய நீதிமன்றம் இவருக்கு இத்தண்டனையை விதித்துள்ளது.

இந்நிகழ்வு நடப்பதற்கு இரு வாரங்களுக்கு முன்னரே லியோன், கிளாரா தம்பதியினருக்கு விவாகரத்து கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அது தன்னுடைய மடிகணணி என்றும் பாஸ்வோர்ட் தன்னை தவிர வேறு யாருக்குமே தெரியாது எனவும் கிளாரா கூறியதன் அடிப்படையிலேயே லியோனுக்கு இத்தண்டனை உறுதியாகியுள்ளதாக டிற்றோயட் போலிஸ் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

so, தம்பதியினரே இது உங்களுக்கும் நிகழலாம். கவனமாக இருங்கள். ஹீ ஹீ ஹீ.


source: Washington Post
Stumble
Delicious
Technorati
Twitter
Facebook
Yahoo
Reddit
Feed

December 16, 2010

பறக்கும் வாகனம் - ஹம்வீ

வாகனங்கள் பறப்பது சினிமாவில் சாத்தியம், இதனை நாம் பல சை-பை (Sci-fi) சினிமாக்களில் பார்த்திருக்கிறோம். எனினும் நாம் இதுவரை ரியாலிடியில் இவற்றை பார்த்தது கிடையாது. இவற்றையெல்லாம் உடைத்தெறிய இப்போது அமெரிக்காவின் டார்பா (DARPA) எனப்படும் Defence Advanced Research Project Agency தயாராகி வருகின்றது. ஹம்வீ (HUMVEE) எனப்படும் High Mobility Multipurpose Wheeled Vehicle ஐயும் ஹெலிகாப்டர் ஐயும் ஒன்றுசேர்த்து டிஎக்ஸ் (TX) எனப்படும் புதிய பறக்கும் வாகனம் தயாரிக்கும் முயற்சியில் டார்பா தயாராகி வருகிறது.
Humvee
இந்த டிஎக்ஸ் ரக வாகனம் தரையில் மணிக்கு 65 மைல்கள் வேகத்திலும், வானத்தில் மணிக்கு 150 மைல்கள் வேகத்திலும் செல்லவல்லது. எனினும் இது தரையில் செல்லக்கூடிய உச்ச வேகத்தை கொண்ட மிலிட்டரி வாகனங்களின் வேகத்தை விட குறைந்ததாகவும், மிலிட்டரி ஹெலிக்கொப்டர்களின் வேகத்தை விடவும் குறைவாகவும் இருப்பது சற்றே பின்னடைவே. இது தரையிலும், வானத்திலும் ஒரு சராசரியயான வாகனமே. இந்த வாகனம் துருப்புக்களை ஏற்றி செல்லும்போது எதிரிகளின் தாக்குதல்களுக்கு இலக்கானால் பெரிய பாதிப்புக்கள் இன்றி உடனடியாக தரையிறக்கம் செய்யக்கூடியதாக இருப்பதும் பின்னர் அதிலிருந்து தப்பிச்செல்ல கூடியதாக இருப்பதுமே இதனது பிளஸ் பாயிண்ட் ஆகும்.
TX
இதனை தரையில் பாவிக்கும் போது ஹெலிகாப்டர் பிலேட்ஸ் (Blades) உள்நோக்கி வரும் வண்ணம் டிசையின் செய்யப்பட்டுள்ளது. டிஎக்ஸ் ஒன்றின் பெறுமதி சுமார் 2 லட்சம் அமெரிக்க டாலர் என கணக்கிடப்பட்டுள்ளது. இது 2015 இல் பாவனைக்கு வருமெனவும் கூறப்படுகிறது.          
Stumble
Delicious
Technorati
Twitter
Facebook
Yahoo
Reddit
Feed

December 15, 2010

2400 வருடங்கள் பழமை வாய்ந்த சூப் உறைந்த நிலையில் சீனாவில் கண்டுபிடிப்பு.

சீனாவின் அகழ்வாராய்ச்சியாளர்கள் 2400 வருடங்கள் பழமை வாய்ந்த சூப் குடிக்கும் பாத்திரம் ஒன்றை சியான் (Xian) மாகாணத்தில் கண்டெடுத்துள்ளர்கள். அதில் சிறப்பம்சம் என்னவென்றால் அப்பாத்திரத்தில் அந்த காலத்தில் குடித்த சூப்பின் மிகுதி அப்படியே உறைந்து காணப்படுகிறது.

ஒரு விமானநிலையம் அமைப்பதற்காக நிலம் தோண்டப்பட்டபோதே இது கண்டுபிடிக்கப்பட்டதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. அப்பாத்திரத்திலுள்ள உறைந்த நிலையிலுள்ள சூப்பில் என்ன என்ன அடங்கியிருக்கிறது என்பதனை கண்டறிய ஆய்வுகள் மேற்கொள்ளபடுகின்றன. இதன் முடிவின் மூலம் அன்றைய மக்கள் என்ன வகையான உணவுகள் உட்கொண்டனர் என்பதனை அறிய முடியும் எனவும் அந்த செய்தி மேலும் தெரிவிக்கின்றது.


இது மாதிரியான பாத்திரம் ஒன்றை உறைந்த நிலையில் எடுத்திருப்பது சீன வரலாற்றிலேயே முதல் தடவையாகும் என ஆய்வாளர் ஒருவர் கூறியுள்ளார். இதன் மூலம் கி.மு. 475-221 ஆண்டுகளில் மக்களின் வாழ்க்கை தரம் எப்படி இருந்தது என்பதனை அறியலாம்.

சியான் மாகாணம் சீனாவின் ஆக தொன்மையான நகரங்களில் ஒன்றாகும், அதற்கு 3100 வருடங்கள் பிற்பட்ட வரலாறு பல உண்டு. இந்நகரம் சுமார் 1100 வருடங்கள் சீனாவின் தலைநகராகவும் இருந்துள்ளது என்பது சிறப்பம்சமாகும்.

இந்த சூப் உறைந்த நிலையுள்ள பாத்திரத்துடன் ஒரு வாசனைகள் அற்ற திரவம் அடங்கிய குடுவை ஒன்றும் கண்டெடுக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. அது வயின் ஆக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

         
Stumble
Delicious
Technorati
Twitter
Facebook
Yahoo
Reddit
Feed

December 2, 2010

சண் பிரான்சிஸ்கோவின் ஈய வளி மாசடைதலில் (Lead Air Pollution) 1/3 ஆசியாவின் பங்கு.

சூழல் மாசடைதலை நெறியாள்வது என்பது மிகப்பெரிய வேலை. இந்த நிமிடத்தில் உலகின் பெரும்பான்மையினரின் சிந்தனையும் அதுவே. மாசுபடுதலை முற்றாக தவிர்த்தல் என்பது முடியாத காரியம், ஆனால் அதனை சரியான நெறியாள்கையில் கட்டுபடுத்த முடியும். இது பற்றிய கற்றல்கள் இன்று பெரு முக்கியம் பெற்று இருக்கின்றன என்பதுவே இதனவசியத்திற்கான சாட்சி. 

வாயு அல்லது வளி மாசடைதல் பற்றி கேள்வியுற்றிருப்பீர்கள் ஆங்கிலத்தில் air pollution என்று கூறுவார்கள். இதற்கான சரியான வரையறை பின்வருமாறு. 

வளி மாசடைதல் என்பது மனிதனால் உருவாக்கப்பட்ட வேதிப்பொருட்கள், துகள் பொருட்கள், உயிரியற் பொருட்கள் என்பன வளிமண்டலத்தில் கலப்பதைக் குறிக்கும். இது மனிதர்களுக்குப் பாதிப்பு அல்லது வசதிக் குறைவை ஏற்படுத்துவதுடன், சூழலுக்கும் கெடுதல் விளைவிக்கின்றது. (நன்றி: விக்கிபீடியா) 



உலகின் எங்கோ ஒரு மூலையில் வெளியாகும் வாயுக்கழிவு பல ஆயிரம் மைல்களுக்கு அப்பாலுள்ள பல பிரதேசங்களை மாசடைய வைக்க கூடியது. மிக அண்மையில் அமெரிக்க DOE (Dept of Energy) ஐ சேர்ந்த விஞ்ஞானிகளினால் செய்யப்பட்ட ஆய்வுகளில் மிக திடுக்கிடும் உண்மைகள் பல தெரிய வந்துள்ளன. இவ்வாறான ஒரு ஆய்வு நடத்தப்பட்டமை இதுவே முதல் தடவையாகும் என Lawrence Berkeley National Laboratory சார்பில் பேசவல்ல ஒருவர் தெரிவித்தார். சண் பிரான்சிஸ்கோவின் இரு முக்கிய இடங்களில் செய்த சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்ட ஈய துகல்களினது (Lead Particles) மொத்தத்தில் மூன்றில் ஒரு பங்கு  ஆசிய கண்டத்தை சேர்ந்தது என கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக இவை பெரும்பாலும் சீனாவிலிருந்து அதாவது கிட்டத்தட்ட ஏழாயிரம் மைல் தொலைவிலிருந்து வந்திருப்பதாக அறியப்பட்டுள்ளது. 

சீனாவில் இவ்வாறான வாயு கழிவு வெளியேற்றம் பெருமளவில் நடந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. உலகின் பெருமளவு Manufacture related Outsourcing அங்கு நடப்பதே இதற்கான முக்கிய காரணமாகும். எது எவ்வாறு இருப்பினும், ஒரு நாட்டின் வாயு கழிவுகள் அயல் நாடுகள் பலவற்றை நாசமாக்குவது ஏற்றுக்கொள்ளகூடிய விடயமன்று. சீனா மாத்திரமன்று, அமெரிக்காவின் coal plants இலிருந்து வெளியாகும் பல்வேறு வாயு கழிவுகளினால் உலகம் முழுவதுமே பாதிப்பினை எதிர்நோக்குகின்றது. 



இவ்வாறான நடவடிக்கைகளினால் வளிமண்டலத்தில் கார்பன் டை ஒட்சயிட்டின் (CO2) செறிவு அதிகரிக்கின்றது. வளிமண்டலத்திற்கு தெரிவதில்லை எந்த எந்த நாடுகளின் வாயு கழிவுகள் தன்னை வந்து அடைகின்றன என்பது. ஆனால் இதனால் உண்டாகும் உலகின் காலநிலை மாற்றம் உலகின் எல்லா நாடுகளிற்கும் பொதுவானதே. 

இதற்கு சரியான தீர்வு, உலகின் வாயு கழிவுகளின் சரியான நேறியாள்கையே. ஆனால் உண்மையில் இது சரியாக நடப்பதில்லை. 


Stumble
Delicious
Technorati
Twitter
Facebook
Yahoo
Reddit
Feed

November 30, 2010

சமூகத்திலிருந்து ஒளிக்கப்பட்ட ஐந்து குழந்தைகள் - பகீர் சம்பவம்

2 -13 வயாதான ஐந்து குழந்தைகளை உலகம் தெரியாது பாழடைந்த வீடொன்றினுள் வைத்திருந்த சம்பவம் ஒன்று நேற்று பென்சில்வேனியாவில் அமெரிக்க அரச அதிகாரிகளினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிறப்பு சான்றிதல்கள், தடுப்பூசி அடித்ததற்கான ஆதாரங்கள், பாடசாலையில் கற்றதற்கான ஆதாரங்கள் எதுவுமே கிடைக்க வில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள், இந்த குழந்தைகள் நெடுங்காலமாக இவ்வாறு மறைத்து வைக்கபட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.



இந்த குழந்தைகளின் பெற்றோர்களான Louann Bowers உம் Sinhue Johnson உம் பொலிசாரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் மீது குழந்தைகளை ஆபத்திற்கு உண்டாக்கிய  ஐந்து குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 

அந்த இடத்திலுள்ள குழந்தைகள் தொடர்பான சமூக சேவைகள் மன்றத்திற்கு கிடைத்த அனாமதேய தொலைபேசி அழைப்பிலிருந்தே இந்த கைப்பற்றலை போலீசார் மேற்கொண்டு இருந்தனர். இந்த குற்றச்சாட்டுகளை இந்த குழந்தைகளின் தாயாரான Bowers மறுத்திருப்பதாக அவரது வக்கீல் தெரிவித்துள்ளார். மேலும் Bowers அவரது 16 வது வயதிலேயே வீட்டை விட்டு ஓடி சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இது பற்றிய மேலதிக விபரங்கள் தொலைகாட்சிக்கு அளிக்கப்படவில்லை.  

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook
Yahoo
Reddit
Feed

November 28, 2010

குவாட்டமாலா நாட்டு soccer வீரரின் உடல் கண்டுபிடிப்பு

குவாட்டமாலா கால்பந்தாட்ட வீரரான Carlos Mercedes Vasquez இன் உடல் கண்டதுண்டமாக வெட்டப்பட்டு ஐந்து பைகளில் அடைக்கப்பட்டதாக கண்டுபிடிக்க பட்டுள்ளதாக அந்நாட்டு போலிஸ் தெரிவித்துள்ளது. 

அவரது உடல் இருந்த பைகளுடன், இவரது மற்றைய பெண்களுடனான சகவாசமே இவரது இத்தகைய சாவுக்கு காரணம் என எழுதப்பட்ட மெசேஜ் உம் கிடைக்க பெற்றதாக போலிஸ் அறிவித்துள்ளது. இது உண்மையான காரணமாகுமா என போலிசார் விசாரித்து வருகின்றனர். 



இந்த 27 வயதான முதல் தர விளையாட்டு வீரர் நண்பர்களுடன் காரில் பயணித்த போதே கடத்தப்படிருக்கிறார். இவர் கடைசியாக குவாட்டமாலா முதல் தர கழகமான  Malacateco க்கு விளையாடியமை குறிப்பிடத்தக்கது. 


Stumble
Delicious
Technorati
Twitter
Facebook
Yahoo
Reddit
Feed

November 27, 2010

எழுபது வயதிலும் இவரே சூப்பர் ஸ்டார் - Sir Cliff Richards

அமேசான் டாட் காம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி பொப் சூப்பர் ஸ்டார் என்று வர்ணிக்கப்படும் எழுபது வயதான Sir Cliff Richards இனுடைய முகம் பொறிக்கப்பட்ட கலேன்டரே அதிகமாக விற்பனை ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. 





இவருடைய பல சிங்க்ள்ஸ் பலருடைய மனதையும் காலத்தால் வென்றது, குறிப்பாக இவருடைய 'Travellin' Light, A voice in the wilderness, I love you போன்ற பாடல்கள் காலத்தால் அழியாத பாராட்டுக்கள் பல பெற்றது. 

இந்த கலேண்டேர் விற்பனையில் இரண்டாம் இடத்தை இன்னொரு பிரித்தானிய பொப் இசை குழுவான JLS எனப்படும் Jack the lad swing பெற்றுள்ளது. முதல் இடம் பிடிப்பார் என எதிர் பார்க்கப்பட்ட Justin Bieber மூன்றாவது இடத்தையே அடைந்துள்ளார். மேலும் நான்காவது, ஐந்தாவது இடங்களை முறையே கனடியரான Michael Buble மற்றும் பிரித்தானியரான Peter Andre அடைந்துள்ளனர். 

பெண்கள் வரிசையில் முதலிடம் வெல்வார் என எதிரு கூறப்பட்ட Lady Gaga நான்காவது இடத்தையே அடைந்தார். முதலிடத்திற்கு Cheryl Cole ம் முறையே இரண்டாம், மூன்றாம், ஐந்தாம் இடங்களுக்கு Kylie Minogue, Pink, kelly Brook உம் வந்தனர். 



Stumble
Delicious
Technorati
Twitter
Facebook
Yahoo
Reddit
Feed

November 22, 2010

புலிகளுக்கு இன்னும் 12 ஆண்டுகளில் அழிவு

காட்டு புலிகளுக்கு அழிவு காலம் நெருங்கி வருகிறது என world wildlife fund (WWF) தெரிவித்துள்ளது. இது பலருக்கு ஆச்சரியத்தையும் பலருக்கு கவலையையும் வரவித்து இருக்கும் என நினைக்கிறேன்.  புலிகள் வாழ்விடம் பெருமளவில் அழிக்கபடுவதனையே முக்கிய காரணமாக WWF கூறியுள்ளது. 

அண்மையில் ரஷ்யாவில் நடைபெற்ற ஒரு மாநாட்டிலேயே இந்த கருத்தை WWF தலைவர் ஜேம்ஸ் லீப் தெரிவித்தார். இந்த மேற்கூறப்பட்ட காடழிப்பு நடவடிக்கைகள் தொடருமேயானால் அடுத்த சீன புலிகளுக்கான வருடமான 2022 க்கு முன்னதாகவே இந்த இனம் அழிந்துவிடும் சாத்தியம் இருப்பதாக அவர் மேலும் கூறினார். மேலும் அவர் கூறுகையில் புலிகளின் தோல் மற்றும் உடலுறுப்புக்கள் ஏகப்பட்ட கிராக்கி உள்ளதாலும் முக்கியமாக சீன மருத்துவத்தில் இவைகளை பெருமளவில் பயன்படுத்துவதனாலும் இந்த அழிவுகள் இடம்பெறுவதாக தெரிவித்தார். 

அதனால் உலக புலிகள் காப்பு திட்டம் அமுல் படுத்த இருப்பதாகவும் அதற்கு பெருமளவில் பணத்தேவை உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 
Stumble
Delicious
Technorati
Twitter
Facebook
Yahoo
Reddit
Feed
Related Posts Plugin for WordPress, Blogger...