சீனாவின் அகழ்வாராய்ச்சியாளர்கள் 2400 வருடங்கள் பழமை வாய்ந்த சூப் குடிக்கும் பாத்திரம் ஒன்றை சியான் (Xian) மாகாணத்தில் கண்டெடுத்துள்ளர்கள். அதில் சிறப்பம்சம் என்னவென்றால் அப்பாத்திரத்தில் அந்த காலத்தில் குடித்த சூப்பின் மிகுதி அப்படியே உறைந்து காணப்படுகிறது.
ஒரு விமானநிலையம் அமைப்பதற்காக நிலம் தோண்டப்பட்டபோதே இது கண்டுபிடிக்கப்பட்டதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. அப்பாத்திரத்திலுள்ள உறைந்த நிலையிலுள்ள சூப்பில் என்ன என்ன அடங்கியிருக்கிறது என்பதனை கண்டறிய ஆய்வுகள் மேற்கொள்ளபடுகின்றன. இதன் முடிவின் மூலம் அன்றைய மக்கள் என்ன வகையான உணவுகள் உட்கொண்டனர் என்பதனை அறிய முடியும் எனவும் அந்த செய்தி மேலும் தெரிவிக்கின்றது.
இது மாதிரியான பாத்திரம் ஒன்றை உறைந்த நிலையில் எடுத்திருப்பது சீன வரலாற்றிலேயே முதல் தடவையாகும் என ஆய்வாளர் ஒருவர் கூறியுள்ளார். இதன் மூலம் கி.மு. 475-221 ஆண்டுகளில் மக்களின் வாழ்க்கை தரம் எப்படி இருந்தது என்பதனை அறியலாம்.
சியான் மாகாணம் சீனாவின் ஆக தொன்மையான நகரங்களில் ஒன்றாகும், அதற்கு 3100 வருடங்கள் பிற்பட்ட வரலாறு பல உண்டு. இந்நகரம் சுமார் 1100 வருடங்கள் சீனாவின் தலைநகராகவும் இருந்துள்ளது என்பது சிறப்பம்சமாகும்.
இந்த சூப் உறைந்த நிலையுள்ள பாத்திரத்துடன் ஒரு வாசனைகள் அற்ற திரவம் அடங்கிய குடுவை ஒன்றும் கண்டெடுக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. அது வயின் ஆக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
2 comments:
நல்ல தகவல்.....
இவ்வளவு நாள் வரை மக்காம இருக்குன்னா அந்த மக்கள் எப்பேற்பட்டவங்களா இருப்பாங்க? :))
நன்றி சகோ உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்,
சீனர்கள் சீனர்கள் தான்.
Post a Comment
பதிவுகள் பற்றிய புதிய யோசனைகளை மாற்று கருத்துக்கள் வரவேற்க்கத்தக்கது. நன்றிகள்.