Pages

Showing posts with label Entertainment. Show all posts
Showing posts with label Entertainment. Show all posts

December 29, 2010

அடுத்த மார்க் ஸுக்கர்பேர்க் (Mark Zuckerberg) யார்?

பேஸ்புக் என்றால் இன்று சிறு குழந்தைகளுக்கு கூட தெரிந்திருக்கும். இதனை கேள்வியுராதவர்கள் பொது அறிவு கொஞ்சமுமே இல்லாதவர்கள் என்று கூறலாம். அப்பேர் பட்ட இந்த பேஸ்புக் உருவாக காரண கர்த்தாவாக இருந்தவரே  இந்த Mark Zuckerberg ஆவார். உலக புகழ் பெற்ற ஹவார்ட் பல்கலைகழகத்தில் கல்வி கற்ற இவர் அக்காலத்திலேயே இந்த பேஸ்புக்கை உருவாக்கினார் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். 

பலர் மிக அண்மையில் வெளிவந்த ஹொலிவூட் திரைப்படமான the Social Networkஐ பார்த்திருப்பீர்கள். அது முழுமையாக இல்லாவிட்டாலும், அநேகமான இடங்களில் Mark Zuckerberg இன் வாழ்க்கையுடன் ஒத்துபோகின்ற ஒரு சினிமா படைப்பு. அதில் இவர் எவ்வாறு இதனை உருவாக்கினார், மற்றும் அதற்காக எடுத்துக்கொண்ட சிரமங்கள் என்ன என மிக அழகாகவும் ஆழமாகவும் இயக்குனர் David Fincher காட்டியிருந்தார். மிக அண்மையில் உலக பிரசித்தி பெற்ற டைம்ஸ் சஞ்சிகை இந்த ஆண்டின் சிறப்பான மனிதர் பட்டத்தை Zuckerbergக்கு வழங்கி கௌரவித்தது. 

எல்லோருமே அறிந்த டெல் (Dell) கணனிகளின் ஸ்தாபகர் Michael Dell இள வயதிலேயே பல சாதனைகளை புரிந்தவர். மருத்துவ கல்வியை மேற்கொண்டு இருந்த அவர் டெல் கணனிகளின் பிரசித்திக்கு  பின்னர் மருத்துவ படிப்பினை துறந்து முழுநேரமும் வியாபாரத்திலேயே மூழ்கியவர். அந்தகாலத்தில் இனியும் ஒருவர் இவர் போல வரமுடியாது என்று பலரும் நினைத்திருந்தார்கள். எனினும் சிறு காலத்திலேயே அவரை விடவும் மிக இளையவயதில் சிறப்பான முறையில் வியாபாரத்தை பெருக்கி காட்டினார் Mark Zuckerberg.  

ஆகவே இந்த Mark Zuckerberg ஐயும் விழுங்க கூடிய ஜாம்பவான்கள் பலர் உருவாகுவார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை. சரி, அவ்வாறு அந்த இடத்தினை அடையக்கூடியவர்கள் என்ற வரிசையில் இருக்கின்ற ஐவரை பற்றியதே இந்த பதிவு.

1.      பிரென்ட் ஸ்கோடா (Brent Skoda)

இவர் உடற்கட்டுக்கான சமூக வலையமைப்பு தள (collegefitness.com) நிறுவனர். 22 வயதான இவர் பல்கலைகழகத்தின் இரண்டாவது வருடம் படிக்கும்போதே இந்த தளத்தை உருவாக்கியமை குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலவரப்படி இவரது தளம் சுமார் 2.4 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியானதாக அறிவிக்கவட்டுள்ளது. மேலும் கூகிள் மற்றும் ஒக்லோகொமா பல்கலைகழகத்தின் கூட்டு உதவியின் காரணமாக கிட்டத்தட்ட சுமார் 3.5 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு கிடைக்கபெற்றுள்ளது.

எல்லோருமே உடற்கட்டுடன் இருப்பதன் அவசியம் இப்போது கூடிக்கொண்டு வருகின்றபடியினால் இவரது தளத்திற்கு மேலும் ஆதரவு பலமடங்கு கூடலாம் என்று கருதப்படுகிறது.


2.      டேவ் & கத்ரின் கூக் (Dave and Cathrine Cook)

இந்த கூக் சகோதரர்கள் எனது ஆண்டுப்புத்தகம் தள (myyearbook.com) உரிமையாளர்கள் ஆவர். இந்த தளம் தற்போதைய நிலவரப்படி சுமார் 20 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியானதாக கூறப்படுகிறது. பேஸ்புக்கின் மாதிரியில் அமைந்துள்ள இத்தளம் தற்போது அமெரிக்காவில் வரவேற்பை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
  

3.      மாட்டி நிபெல்சுட்ஸ் (Matti Niebelschutz)

ஜெர்மனியை சேர்ந்த சட்டத்துறை மாணவரான இவர் என்னுடைய வாசனைதிரவியம் தள (myparfeum.com) நிறுவனர். இந்த தளத்தின் சிறப்பம்சம் என்னவெனில் எங்களுக்கு வேண்டிய வாசனைதிரவியத்தை நாங்களே விருப்பப்படி உருவாக்கிகொள்ள முடியும். இந்த தளம் தற்போது ஜெர்மனியையும் தாண்டி இதர ஐரோப்பிய நாடுகளிலும் செல்வாக்கு பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

4.      பெண் மெக்கீன் & டேன் லீஹை (Ben Mclean & Dan Leahy)

இவர்கள் villagevines.com தளத்தின் உரிமையாளர்கள். அமெரிக்காவின் ஆறு முக்கிய நகரங்களிலுள்ள பிரபலமான உணவுவிடுதிகளில் எமக்கு பிடித்தமான உணவுவகைகளை சற்றே குறைந்த விலையில் பெற்று தருவதே இந்த தளத்தின் நோக்காகும். பிரபல்யமான உணவு விடுதிகளுன் கூட்டு சேர்ந்தே இந்த வியாபாரத்தை இவர்கள் ஆரம்பித்து இருக்கிறார்கள். ஆரம்பத்தில் நியூயார்க்கில் மாத்திரமே இவர்களது சேவை இருந்தது, பின்னர் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பின் காரணமாக மேலும் முக்கிய ஐந்து நகரில் தற்போது இவர்களின் சேவையை பெறக்கூடியதாக இருக்கிறது.


5.      ஹசன் ஹம்டான் (Hassan Hamdan)

பலஸ்தீனிய நாட்டை பிறப்பிடமாக கொண்ட இவர் சவூதியில் இன்ஜினியரிங் படித்து வருகிறார். மத்திய கிழக்கு நாடுகளை மையமாக கொண்டு இவர் தொழினுட்பத்திநூடாக இ மார்கடிங், இலகு தகவல் பரிமாற்றம் போன்றவைகள் அடங்கியாதாக உள்ள ஒரு தளத்தினை ஆரம்பித்து செயற்பட்டு வருகிறார். இவருக்கு நல்ல ஆதரவு கிடைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆபிரிக்க நாடுகளுக்கும் இதன் சேவையை வழங்க தற்போது முன்வந்துள்ளதாக மேலும் கூறப்படுகிறது.     

எது எவ்வாறாயினும் Mark Zuckerberg இன் இடத்தினை அடைவதற்கு இவர்கள் இன்னும் வெகுதூரம் பயணிக்க வேண்டியிருக்கும்.     

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook
Yahoo
Reddit
Feed

November 27, 2010

எழுபது வயதிலும் இவரே சூப்பர் ஸ்டார் - Sir Cliff Richards

அமேசான் டாட் காம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி பொப் சூப்பர் ஸ்டார் என்று வர்ணிக்கப்படும் எழுபது வயதான Sir Cliff Richards இனுடைய முகம் பொறிக்கப்பட்ட கலேன்டரே அதிகமாக விற்பனை ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. 





இவருடைய பல சிங்க்ள்ஸ் பலருடைய மனதையும் காலத்தால் வென்றது, குறிப்பாக இவருடைய 'Travellin' Light, A voice in the wilderness, I love you போன்ற பாடல்கள் காலத்தால் அழியாத பாராட்டுக்கள் பல பெற்றது. 

இந்த கலேண்டேர் விற்பனையில் இரண்டாம் இடத்தை இன்னொரு பிரித்தானிய பொப் இசை குழுவான JLS எனப்படும் Jack the lad swing பெற்றுள்ளது. முதல் இடம் பிடிப்பார் என எதிர் பார்க்கப்பட்ட Justin Bieber மூன்றாவது இடத்தையே அடைந்துள்ளார். மேலும் நான்காவது, ஐந்தாவது இடங்களை முறையே கனடியரான Michael Buble மற்றும் பிரித்தானியரான Peter Andre அடைந்துள்ளனர். 

பெண்கள் வரிசையில் முதலிடம் வெல்வார் என எதிரு கூறப்பட்ட Lady Gaga நான்காவது இடத்தையே அடைந்தார். முதலிடத்திற்கு Cheryl Cole ம் முறையே இரண்டாம், மூன்றாம், ஐந்தாம் இடங்களுக்கு Kylie Minogue, Pink, kelly Brook உம் வந்தனர். 



Stumble
Delicious
Technorati
Twitter
Facebook
Yahoo
Reddit
Feed
Related Posts Plugin for WordPress, Blogger...