Pages

Showing posts with label Bizzare. Show all posts
Showing posts with label Bizzare. Show all posts

December 28, 2010

மனைவியின் ஈமெயிலை வாசித்தமைக்காக கணவனுக்கு சிறை

மனைவியின் ஜிமெயில் கணக்கின் பாஸ்வோர்ட்டை உபயோகித்து அவரது ஈமெயில்களை வாசித்த கணவனுக்கு ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனை கிடைத்த சம்பவம் ஒன்று அமெரிக்காவின் மிச்சிகன் நகரத்தில் இடம்பெற்றுள்ளது.

இது பற்றி போலீஸ் மேலும் விவரிக்கையில் லியோன் வால்கர் என்பவர் ஒரு கம்ப்யூட்டர் தொழில்நுட்பவியலாளர், இவரது மனைவியான கிளாரா வால்கர் அவரது முன்னைய கணவருடன் இரகசிய தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகித்தே லியோன், கிலாராவின் மடிகணணியை உபயோகித்து அவரது ஈமெயில்களை வாசித்துள்ளார். ஆனாலும் இது அமெரிக்க சட்டத்தின் பிரகாரம் மற்றவர்களின் அடையாளங்களை திருடும் குற்றத்தினுள் உள்வாங்கிய நீதிமன்றம் இவருக்கு இத்தண்டனையை விதித்துள்ளது.

இந்நிகழ்வு நடப்பதற்கு இரு வாரங்களுக்கு முன்னரே லியோன், கிளாரா தம்பதியினருக்கு விவாகரத்து கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அது தன்னுடைய மடிகணணி என்றும் பாஸ்வோர்ட் தன்னை தவிர வேறு யாருக்குமே தெரியாது எனவும் கிளாரா கூறியதன் அடிப்படையிலேயே லியோனுக்கு இத்தண்டனை உறுதியாகியுள்ளதாக டிற்றோயட் போலிஸ் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

so, தம்பதியினரே இது உங்களுக்கும் நிகழலாம். கவனமாக இருங்கள். ஹீ ஹீ ஹீ.


source: Washington Post
Stumble
Delicious
Technorati
Twitter
Facebook
Yahoo
Reddit
Feed

December 15, 2010

2400 வருடங்கள் பழமை வாய்ந்த சூப் உறைந்த நிலையில் சீனாவில் கண்டுபிடிப்பு.

சீனாவின் அகழ்வாராய்ச்சியாளர்கள் 2400 வருடங்கள் பழமை வாய்ந்த சூப் குடிக்கும் பாத்திரம் ஒன்றை சியான் (Xian) மாகாணத்தில் கண்டெடுத்துள்ளர்கள். அதில் சிறப்பம்சம் என்னவென்றால் அப்பாத்திரத்தில் அந்த காலத்தில் குடித்த சூப்பின் மிகுதி அப்படியே உறைந்து காணப்படுகிறது.

ஒரு விமானநிலையம் அமைப்பதற்காக நிலம் தோண்டப்பட்டபோதே இது கண்டுபிடிக்கப்பட்டதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. அப்பாத்திரத்திலுள்ள உறைந்த நிலையிலுள்ள சூப்பில் என்ன என்ன அடங்கியிருக்கிறது என்பதனை கண்டறிய ஆய்வுகள் மேற்கொள்ளபடுகின்றன. இதன் முடிவின் மூலம் அன்றைய மக்கள் என்ன வகையான உணவுகள் உட்கொண்டனர் என்பதனை அறிய முடியும் எனவும் அந்த செய்தி மேலும் தெரிவிக்கின்றது.


இது மாதிரியான பாத்திரம் ஒன்றை உறைந்த நிலையில் எடுத்திருப்பது சீன வரலாற்றிலேயே முதல் தடவையாகும் என ஆய்வாளர் ஒருவர் கூறியுள்ளார். இதன் மூலம் கி.மு. 475-221 ஆண்டுகளில் மக்களின் வாழ்க்கை தரம் எப்படி இருந்தது என்பதனை அறியலாம்.

சியான் மாகாணம் சீனாவின் ஆக தொன்மையான நகரங்களில் ஒன்றாகும், அதற்கு 3100 வருடங்கள் பிற்பட்ட வரலாறு பல உண்டு. இந்நகரம் சுமார் 1100 வருடங்கள் சீனாவின் தலைநகராகவும் இருந்துள்ளது என்பது சிறப்பம்சமாகும்.

இந்த சூப் உறைந்த நிலையுள்ள பாத்திரத்துடன் ஒரு வாசனைகள் அற்ற திரவம் அடங்கிய குடுவை ஒன்றும் கண்டெடுக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. அது வயின் ஆக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

         
Stumble
Delicious
Technorati
Twitter
Facebook
Yahoo
Reddit
Feed

December 10, 2010

கனவுகளை பற்றிய சில உண்மைகள்


கிறிஸ்டோபர் நோலனின் படமான Inception வெளிவந்ததிலிருந்து பலர் கனவுகள் பற்றி ஆராய தொடங்கி விட்டார்கள். அதிலே நானும் ஒருவன். அந்த படத்தில் எவ்வாறு ஒருவரின் கனவினுள் சென்று அவர் பற்றிய தகவல்களை லியனார்டோ டி காப்ரியோவும் அவரது டீமும் தேடுவார்கள் என்பதே அப்படத்தின் கதை. மிக சிறந்த தொழில்நுட்ப திரைப்படமான அது பலரது பாராட்டுக்களை இப்போதே பெற்றுவிட்டது.

அந்த திரைப்படத்தால் அடைந்த தாக்கத்தினால்தான் கனவுகள் பற்றிய எனது சிறிய ஆராய்ச்சி தொடங்கியது. அந்த ஆராய்ச்சி சிறப்பாக போகுமேயானால் பிறிதொரு பதிவில் அவை பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன். ஒரு மனிதனின் சராசரி ஆயுள்காலத்தில் சுமார் ஆறு ஆண்டுகள் நித்திரையில் கழிகின்றது. இன்று இந்த பதிவில் கனவுகள் பற்றிய சில அரிய தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.


சகலருமே கனவு காண்கின்றனர். அதில் விதிவிலக்கு இல்லை. பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கும் கனவுகள் வருகின்றன. சில மனநல குறைபாடு உள்ளவர்களை தவிர எல்லோருமே கனவு காண்பதாக சில விஞ்ஞான ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மிருகங்களும் கனவுகள் காண்பதாக கூறப்படுகிறது.

அநேகமானவர்கள் நாளொன்றுக்கு சுமார் நான்கு தொடக்கம் ஏழு கனவுகள் காண்கின்றனர்.

ஒருவர் தூங்கி எழுந்து ஐந்து நிமிடத்திலேயே ஐம்பது சதவிகிதமான கனவுகள் மறந்து போய்விடுமாம், பத்து நிமிடத்தில் சுமார் தொண்ணூறு சதவிகிதமான கனவுகள் மறந்து விடுமாம்.

குறட்டை விடும்போது கனவுகள் வருவதில்லை என சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன.


நித்திரைக்கு முன் சீஸ் (Cheese) சாப்பிட்டால் கெட்ட கனவுகள் வருவதில்லை எனவும் கூறப்படுகிறது. எது எவ்வாறாயினும் cheese சாப்பிட்டால் நல்ல நித்திரை வரும் எனவும் அந்த தகவல் மேலும் தெரிவிக்கிறது.


கனவில் வரும் உருவங்கள், சிந்தனைகள் எமக்கு எப்போதாவது பழக்கமானதாகவே அமைந்திருக்கும். கனவில் புது விடயங்கள் பற்றி வருவதில்லை என சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

கனவின் போது நிகழ்காலத்தில் நிகழும் சிலவற்றை உணரமுடிகிறது. உதாரணத்திற்கு நீங்கள் தூங்கும் போது உங்கள் அருகிலிருக்கும் ஒருவர் எதாவது ஒரு இசைக்கருவியை வாசித்து கொண்டிருக்கிறார் என்று வையுங்கள், உங்களது கனவில் நீங்கள் ஒரு மியுசிகல் ஷோவில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படலாம்.

ஆண்கள் காணும் கனவுகளுக்கும் பெண்களது கனவுகளுக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் இருப்பதாக ஆராய்ச்சி முடிவு ஒன்று கூறுகின்றது. அதாவது, ஆண்கள் காணும் கனவில் சுமார் எழுபது சதவிகிதம் மற்றய ஆண்களை பற்றியதாகவே இருக்குமாம், ஆனால் பெண்களது கனவுகள் அரைவாசிக்கு அரைவாசியாக இரு பாலினரையும் சார்ந்தாகவே இருக்குமாம்.

மற்றுமொரு முக்கிய அம்சம், கனவுகள் பெரும்பாலும் குரோதம், பொறாமை, சிக்கல்கள் என்பனவற்றை சார்ந்ததாகவே இருக்குமாம். நல்ல கனவுகள் வருவது குறைவாகவே இருப்பதாக கூறப்படுகிறது.

நவீன விஞ்ஞான வளர்ச்சியால் இன்னும் சில காலங்களில் எமது கனவுகளை பதிந்து வைக்க கூடிய தொழில்நுட்பம் வரலாம் எனவும் எதிர்வு கூறப்படுகிறது. Inception இல் வருவது போன்று ஒருவர் கனவிற்குள் சென்று அவர் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளகூடிய காலம் வெகு தொலைவில் இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது.

Stumble
Delicious
Technorati
Twitter
Facebook
Yahoo
Reddit
Feed
Related Posts Plugin for WordPress, Blogger...