பின்னர் மீள் சுழற்சி பைகளின் அறிமுகம் அதற்கு சரியான தீர்வாக அமைந்தது என பல்வேறு பட்ட சுகாதார, சூழலியல் ஆராய்சிகள் உறுதி செய்ததை அடுத்து பலரும் பரவலாக அதனை பாவிக்க தொடங்கினர். சூழல் பற்றிய கண்ணோட்டம் போது மக்களிடையே பெருமளவு ஆதரவினை பெற்றது. எங்கும் Go Green கோஷம் காதை பிளந்தது எனலாம். இதனை தொடர்ந்து உலகின் வொர்க் சொப் (world's workshop) எனப்படும் சீனாவிலிருந்து பல்வேறுபட்ட டிசைன்களுடனான பைகளுக்கு பெரும் கிராக்கி ஏற்பட்டது. அமெரிக்க ஐரோப்பிய நகரங்களில் இவைகள் மிக பிரபல்யம் அடைந்தன எனலாம்.
இப்போது திடீரெண்டு பூகம்பம் மூண்டாற்போல் மீள் சுழற்சி பைகளும் சூழலிற்கு நல்லதல்ல என புதியதொரு ஆய்வு தெரிவிப்பதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இது அறிவுஜீவிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அட்செய்தி மேலும் குறிப்பிடுகையில் மீள் சுழற்சி பைகளில் ஈயம் (lead) அடங்கியிருப்பதாகவும் அது நிலக்கீழ் நீரை (ground-water) அடையும் போது பெரும் பாதிப்புக்கள் நிகழலாம் எனவும் எதிர்வு கூறப்படுகிறது.
எது எவ்வாறாயினும் இதற்கு தகுந்த பிரதியீட்டை கண்டு பிடிக்கும் வரை இதன் பாவனையே உபயோகத்தில் இருக்குமெனவும் அட்செய்தி மேலும் தெரிவிக்கிறது. பொலிதீன், கடதாசி, பிளாஸ்டிக் போன்றவைகளின் பாதிப்பினை விட இதன் பாதிப்பு குறைவாக இருப்பதனாலேயே இவ்வாறு கூறப்படுகிறது. யாருக்கு தெரியும் இதற்கு பிறகு மீண்டும் துணிகளாலான பைகளே பாவனைக்கு வருகின்றனவோ என்னவோ.
No comments:
Post a Comment
பதிவுகள் பற்றிய புதிய யோசனைகளை மாற்று கருத்துக்கள் வரவேற்க்கத்தக்கது. நன்றிகள்.