மத்திய கிழக்கு மற்றும் உலகின் இதர பாகங்களில் காணப்படும் எரிபொருள் என்றாவது ஒரு நாளைக்கு முடியத்தான் போகிறது. எரிபொருள் என்ன எடுக்க எடுக்க நீர் போன்று ஊறுகின்ற ஒரு பொருளா? இல்லையே. அப்போ இந்த எரிபொருள் எல்லாம் ஒருநாள் முடிந்துவிட்டால் என்ன நடக்கும் என்று நாம் எல்லோருமே எப்போவாவது எங்களுக்குள் அல்லது மற்றவர்கள் மத்தியில் உரையாடியிருப்போம். அதில் பல பேர் முடிவும் (result) கண்டிருக்கமட்டோம்.
இங்கு தான் எரிபொருளுக்கான பிரதியீடு (Substitution for fuel) பற்றிய கவலை உண்டாகின்றது. எரிபொருள் பிரதியீடாக பலவற்றை கூறலாம். உதாரணமாக சூரியசக்தி, அணுச்சக்தி, காற்றின் சக்தி, அலைகளின் சக்தி ஏன் மிக அண்மையில் மின்னலை கூட பயன்படுத்த முடியும் என இந்த லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது. எனினும் பல்வேறு காரணங்களால் இவை எல்லோருக்குமே உகந்ததாக இல்லை. ஆயினும் நாம் தற்போது பயன்படுத்தும் எரிபொருள் முடிவடையுமேயானால் நமக்கு வேறு வழியில்லை அடுத்த பிரதியீடுகளுக்கு செல்வதை தவிர. இதற்காகவே உலகின் வல்லரசு நாடுகள் பல மில்லியன் டாலர்களை ஆய்வுகளுக்காக செலவழிக்கின்றன. இது காலத்தின் தேவையும் கூட.
இந்த பதிவு அதுபோன்ற எரிபொருள்/மின்சக்தி பிரதியீடு சம்பந்தமான ஒரு ஆய்வு பற்றியது.
JST எனப்படும் Japan Science and Technology Agency ம் JICA எனப்படும் Japan International Cooperation Agency ம் இணைந்து செயற்படுத்தும் இந்த ஆய்வுக்கு சஹாரா சூரியசக்தி வளர்ப்பு திட்டம் (Sahara Solar Breeder Project) என பெயரிடப்பட்டுள்ளது. இதில் ஜப்பானிய அல்ஜீரிய பல்கலைகழகங்கள் இணைந்து செயல்படுகின்றன. இந்த திட்டத்தின் மூலம் உலகின் மிக பெரிய பாலைவனமான சஹாராவை 2050ம் ஆண்டில் உலகின் அரைவாசிக்கு மேலான மின்சக்தியை (அதாவது சூரியசக்தி மூலமான மின்சக்தியை) உண்டாக்க வள்ள இடமாக மாற்றுவதே நோக்காகும்.
சரி இப்போ இதன் அடிப்படையை பற்றி பார்ப்போம். சூரியசக்தியை பெறுவதற்கு சூரியகலங்கள் உருவாக்கப்படவேண்டும். சூரியகலங்களின் அடிப்படை மூலம் (Basisbasis) சிலிக்கன் (சிலிக்கா அல்லது சிலிகான் டைஒக்சயிட் எனவும் கூறலாம்) எனப்படும் இரசாயண பதார்த்தம் ஆகும். இந்த சிலிக்கா சில வகையான மணலிலிருந்தே எடுக்கபடுகிறது. அதாவது சஹாரா பாலைவனத்தில் இயற்கையாகவே பெருமளவில் இருக்கும் சிலிக்கன் ஐ பாவித்து உண்டாக்கபடும் சூரியகலங்களில் இருந்தே மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு இவர்கள் தீர்மானித்து இருக்கிறார்கள்.
இது பற்றி டோக்கியோ பல்கலைக்கழகத்தை சேர்ந்த Hideomi Koinuma கூறும்போது, சஹாரா பாலைவனத்தில் மிக தூய்மையான (high quality) சிலிகான் இருப்பதாகவும், உலகில் இதற்க்கு முன் இது போன்ற ஒரு ஆய்வு நடத்த படவில்லை எனவும் குறிப்பிட்டார். மேலும் இதன்மூலம் உருவாக்கப்படவுள்ள மின்சாரத்தை high-temperature superconductors மூலமாக பல நூறு கிலோமீட்டர்கள் தூரம் இழப்புக்கள் இன்றி கடத்த முடியும் எனவும் தெரிவித்தார்.
தற்போது இத்திட்டம் பற்றிய முன்னோட்ட ஆய்வுகள் நடந்து கொண்டிருகின்றன. அதில் இவர்கள் முகம் கொடுக்கவேண்டிய பல்வேறு பிரச்சினைகள் பற்றியும் அதற்கான பதிலீடு எவ்வாறு அமையப்போகின்றது என்பது பற்றியும் அதிகமாக கவனம் எடுக்கபடுகிறது. மேலும் பாலைவனங்களில் உருவாகும் மணல்காற்றே (Sand-storm) மிக முக்கியமான பிரச்சினையாகவும் கூறபடுகிறது.
எது எவ்வாறாயினும் இது நடைமுறை படுத்தும் போது மேலும் பல எதிர்பாக்காத இன்னல்கள் வரக்கூடிய சாத்தியங்கள் இருப்பினும் இவற்றை எல்லாம் வெற்றி கொண்டு இந்த ஆய்வு மனித குலத்திற்கு பயனளிக்க வள்ளதாக அமைய எமது வாழ்த்துக்கள்.
6 comments:
அறிவியல் சார்ந்த கட்டுரைகள் வலைப்பூவில் வருவது குறைவு,உங்களுக்கு ஆர்வத்திற்கு பாராட்டுக்கள்.
உங்கள் கருத்திற்கும் வருகைக்கும் நன்றிகள் சகோதரி ஆஸியா
//இருப்பினும் இவற்றை எல்லாம் வெற்றி கொண்டு இந்த ஆய்வு மனித குலத்திற்கு பயனளிக்க வள்ளதாக அமைய எமது வாழ்த்துக்கள். //
எல்லார் ஆசையும் அதுவே தான்
நல்ல பயனுள்ள பகிர்வு சகோ!
வாழ்த்துக்கள்
வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் சகோதரி ஆமினா
அறிந்து கொள்ள வேண்டிய அவசியமான பதிவு.தொடருங்கள்.
நன்றிகள் சகோதரி ஸாதிகா
Post a Comment
பதிவுகள் பற்றிய புதிய யோசனைகளை மாற்று கருத்துக்கள் வரவேற்க்கத்தக்கது. நன்றிகள்.