வாயு அல்லது வளி மாசடைதல் பற்றி கேள்வியுற்றிருப்பீர்கள் ஆங்கிலத்தில் air pollution என்று கூறுவார்கள். இதற்கான சரியான வரையறை பின்வருமாறு.
வளி மாசடைதல் என்பது மனிதனால் உருவாக்கப்பட்ட வேதிப்பொருட்கள், துகள் பொருட்கள், உயிரியற் பொருட்கள் என்பன வளிமண்டலத்தில் கலப்பதைக் குறிக்கும். இது மனிதர்களுக்குப் பாதிப்பு அல்லது வசதிக் குறைவை ஏற்படுத்துவதுடன், சூழலுக்கும் கெடுதல் விளைவிக்கின்றது. (நன்றி: விக்கிபீடியா)
உலகின் எங்கோ ஒரு மூலையில் வெளியாகும் வாயுக்கழிவு பல ஆயிரம் மைல்களுக்கு அப்பாலுள்ள பல பிரதேசங்களை மாசடைய வைக்க கூடியது. மிக அண்மையில் அமெரிக்க DOE (Dept of Energy) ஐ சேர்ந்த விஞ்ஞானிகளினால் செய்யப்பட்ட ஆய்வுகளில் மிக திடுக்கிடும் உண்மைகள் பல தெரிய வந்துள்ளன. இவ்வாறான ஒரு ஆய்வு நடத்தப்பட்டமை இதுவே முதல் தடவையாகும் என Lawrence Berkeley National Laboratory சார்பில் பேசவல்ல ஒருவர் தெரிவித்தார். சண் பிரான்சிஸ்கோவின் இரு முக்கிய இடங்களில் செய்த சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்ட ஈய துகல்களினது (Lead Particles) மொத்தத்தில் மூன்றில் ஒரு பங்கு ஆசிய கண்டத்தை சேர்ந்தது என கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக இவை பெரும்பாலும் சீனாவிலிருந்து அதாவது கிட்டத்தட்ட ஏழாயிரம் மைல் தொலைவிலிருந்து வந்திருப்பதாக அறியப்பட்டுள்ளது.
சீனாவில் இவ்வாறான வாயு கழிவு வெளியேற்றம் பெருமளவில் நடந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. உலகின் பெருமளவு Manufacture related Outsourcing அங்கு நடப்பதே இதற்கான முக்கிய காரணமாகும். எது எவ்வாறு இருப்பினும், ஒரு நாட்டின் வாயு கழிவுகள் அயல் நாடுகள் பலவற்றை நாசமாக்குவது ஏற்றுக்கொள்ளகூடிய விடயமன்று. சீனா மாத்திரமன்று, அமெரிக்காவின் coal plants இலிருந்து வெளியாகும் பல்வேறு வாயு கழிவுகளினால் உலகம் முழுவதுமே பாதிப்பினை எதிர்நோக்குகின்றது.
இவ்வாறான நடவடிக்கைகளினால் வளிமண்டலத்தில் கார்பன் டை ஒட்சயிட்டின் (CO2) செறிவு அதிகரிக்கின்றது. வளிமண்டலத்திற்கு தெரிவதில்லை எந்த எந்த நாடுகளின் வாயு கழிவுகள் தன்னை வந்து அடைகின்றன என்பது. ஆனால் இதனால் உண்டாகும் உலகின் காலநிலை மாற்றம் உலகின் எல்லா நாடுகளிற்கும் பொதுவானதே.
இதற்கு சரியான தீர்வு, உலகின் வாயு கழிவுகளின் சரியான நேறியாள்கையே. ஆனால் உண்மையில் இது சரியாக நடப்பதில்லை.
6 comments:
நல்ல பகிர்வு.
நன்றி சகோதரி
தெரியாத பல விஷயங்கள் தெரிந்துக்கொண்டேன்.
உண்மையில் அனைவரும் அறிய வேண்டிய பகிர்வு இது!!!
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி...
தொடர்ந்து நல்ல பதிவுகள் பல தர மனமார்ந்த வாழ்த்துக்கள்
Word verification ஐ எடுத்து விடுங்க :)
அற்புதமான பதிவு!
உங்கள் வாழ்த்துக்களுக்கு எனது நன்றிகள் சகோதரி ஆமினா. நிச்சயம் முயற்சிக்கிறேன் நல்ல பதிவுகள் பகிர்வதற்கு.
word verification ஐ எடுத்தாச்சு :)
ரொம்ப நன்றிகள் எஸ்.கே. உங்கள் வருகைக்கும், பதிவுக்கும்.
Post a Comment
பதிவுகள் பற்றிய புதிய யோசனைகளை மாற்று கருத்துக்கள் வரவேற்க்கத்தக்கது. நன்றிகள்.